தனியாக தேனிலவுக்கு சென்ற மனைவி.. அனில் கபூர் பகிர்ந்த சுவாரஸ்யம்!


bredcrumb

Bollywood

oi-Vinoth R

|

சென்னை : பாலிவுட் நடிகர் அனில் கபூர் தன் காதல் திருமணம் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார்.

Aranmanai Kili Pragathi kithu dance | Vaathi Coming | Lock Down Diaries

பாலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடம் கொண்டவர் அனில் கபூர். அவரது மனைவி சுனிதா இவர் இல்லாமலே தேனிலவுக்கு சென்று உள்ளார். இந்த விஷயம் தற்போது பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. கங்கனா ரணாவத் நடித்த குயின் படம் போல் கொஞ்சம் தோன்றினாலும் இந்த கதை கொஞ்சம் வித்தியாசமானது.

Bollywood actor Anil Kapoor shared interesting information about his marriage.

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் சுனிதாவை காதலித்து திருமணம் செய்தவர் இவர்களுக்கு திருமணம் ஆகி 35 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ரியா, சோனம் என்ற இரு மகள்களும், ஹர்ஷவர்தன் என்ற ஒரு மகனும் உள்ளனர். ஹர்ஷவர்தன், சோனம் இருவரும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். ரியா தயாரிப்பாளராக வலம் வருகிறார். அனில் கபூர் தன் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பல ஊடக நண்பர்களிடம் சொல்லி வருகிறார்.

ராஜ் கபூர் வீட்டு பார்ட்டியில் சுனிதாவை பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. மேரி ஜங் படத்தை முடித்த பிறகு என் காதலை நான் சொன்னேன். அவருக்கும் என்னை பிடித்திருந்தது. நாளை நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டேன் அவரும் ஓகே என்று கூறினார். காதலை சொன்ன மறுநாளே எங்கள் திருமணம் நடந்தது.

Bollywood actor Anil Kapoor shared interesting information about his marriage.

என் வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் நான் இருந்ததால், நான் படப்பிடிப்புக்கு சென்று விட்டேன். சுனிதா நான் இல்லாமல் தேனிலவுக்கு சென்றுவிட்டதாக அவர் கூறினார். கேரியரில் ஜெயிப்பதற்கு முன் திருமணம் என்ற பெரிய ரிஸ்கில் இறங்காதே என்று பலர் அறிவுரை கூறினாலும் அதை கேட்காமல் நான் ரிஸ்க் எடுத்தேன். சுனிதா போல் நல்ல பெண் எனக்கு மனைவியாக வேண்டும் என்று மட்டும் தான் நான் யோசித்தேன். மிஸ் பண்ண கூடாது என்று முடிவு எடுத்தேன். துணிந்து இந்த ரிஸ்க்கை எடுத்தேன் என்றார்.

Bollywood actor Anil Kapoor shared interesting information about his marriage.

சமையலில் சுனிதாவிற்கு பெரிதாக ஈடுபாடு ஒன்றும் கிடையாது. ஆனால் அவர்களின் மகள்களுக்கோ சமையல் என்றால் மிகவும் பிடிக்குமாம் .

இருவரும் அவர்களின் கணவர்களுக்கு வித விதமாக சமைப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். இவர் பகிர்ந்த இந்த விஷயம் சினிமா வட்டாரத்திற்குள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது .

Bollywood actor Anil Kapoor shared interesting information about his marriage.

தேசாப் , தால் , போன்ற படங்கள் அணில் கபூர் ஹிட் லிஸ்டில் மறக்க முடியாதவை. எத்தனையோ வித்யாசமான கதாபாத்திரங்கள் செய்த இந்த வெற்றி நாயகனின் சொந்த வாழ்க்கையும் சுவாரஸ்யம் நிறைந்ததாகவும் இனிமையாகவும் இருகிறது. இன்னும் பல வெற்றிகள் தொடரட்டும் என்று வாழ்த்துவோம்.Source link

Leave a Reply

Your email address will not be published.